Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அவுஸ்திரேலியா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

9 மார்கழி 2023 சனி 06:39 | பார்வைகள் : 2048


அவுஸ்திரேலியாவில் வெப்ப நிலையானது  கடுமையாக காணப்படும் நிலையில் அதிகாரிகளிடமிருந்து பல பாதுகாப்பு எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும், மிக அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அத்துடன் அதிக நீர் பருக வேண்டும் எனவும்,


தேவையான ஓய்வெடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் போதை மருந்து பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 20 வயது கடந்த இளைஞர்கள் இருவர் அதிக போதை மருந்து பயன்பாட்டால், இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மரணமடைந்துள்ள விவகாரத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.


வெப்ப அலை வீசும் காலத்தில் போதை மருந்து பயன்பாடு, உயிருக்கு ஆபத்தாக முடியும் எனவும் எச்சரித்துள்ளனர். 

மேலும், வெப்பம் அதிகரித்துள்ள நாட்களில் போதை மருந்து பயன்பாடு என்பது ,இரத்தம் உறைதல் உள்ளிட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் எனவும், இதனால் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வார இறுதி நாட்களில் வெப்ப அலை சில பகுதிகளில் அதிகரித்து 60C என்பது போன்று உணரப்பட்டலாம் எனவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக சிட்னி நகரில் வெப்பநிலை உச்சம் தொட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

மேலும், நான்கு ஆண்டுகளாக துறைமுக நகரத்தில் சனிக்கிழமை வெப்பமான நாளாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

சிட்னி நகர வானிலை மையம் தெரிவிக்கையில், நகரின் மேற்கில் குறைந்தபட்சம் 40C மற்றும் 44C வரை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ் புறநகர் தீயணைப்பு சேவை விடுத்துள்ள எச்சரிக்கையில், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் சுமார் 71 புதர் மற்றும் புல் தீ எரிகிறது எனவும் இதில் 29 பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாமல்  தீ பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்