Paristamil Navigation Paristamil advert login

இந்தியர்களை குறிவைக்கும் 17 Appகளை தடை செய்த Google

இந்தியர்களை குறிவைக்கும் 17 Appகளை தடை செய்த Google

9 மார்கழி 2023 சனி 06:55 | பார்வைகள் : 1522


இந்தியர்களை குறிவைக்கும் 17 மொபைல் Appகளை Google தடை செய்துள்ளது, உங்களிடம் இந்த ஆப் இருந்தால் உடனே Delete செய்யவும்.

ஸ்மார்ட்போனில் அவற்றின் தேவை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ப பல செயலிகள் (Apps) உள்ளன. ஆனால் சில செயலிகள் விதிகளை மீறி பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது புதிதல்ல. இதேபோல், இந்திய பயனர்களை குறிவைத்த 17 செயலிகளை கூகுள் தடை செய்தது.

பயனர்களுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் பல பயன்பாடுகள் வரம்பு மீறி செயல்படுகின்றன. இதுபோன்ற செயலிகளைக் கண்டறிந்து தடை செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இப்போது கூகுள், இந்தியப் பயனர்களைக் குறிவைத்து, தகவல்களைத் திருடிய, பயனர்களை உளவியல் ரீதியாகச் சித்திரவதை செய்த, ஆபத்தை எச்சரித்த, அச்சுறுத்தும் 17 செயலிகளைத் தடை செய்துள்ளது.

இந்த செயலிகள் SpyLoan Apps என அழைக்கபப்டுகிறது. இந்த SpyLoan Apps இந்தியாவின் மிகப்பாரிய நெட்வொர்க் ஆகும். இந்த நெட்வொர்க்கிலும் அதே மோசடிகள் நடக்கின்றன. வாடிக்கையாளர்கள், பயனர்கள் ஏமாற்றப்பட்டு இறுதியாக அச்சுறுத்தல் மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உதாரணங்கள் உள்ளன. தற்போது இதுபோன்ற 17 Apps தடை செய்யப்பட்டுள்ளது.

AA Kredit, Amor Cash, GuayabaCash, EasyCredit, Cashwow, CrediBus, FlashLoan, PréstamosCrédito, Préstamos De Crédito-YumiCash, Go Crédito, Instantáneo Préstamo, Cartera grande, Rápido Crédito, Finupp Lending, 4S Cash, TrueNaira, EasyCash ஆகிய 17 ஆப்களை கூகுள் தடை செய்துள்ளது.

இந்த ஆப்ஸ் பயனர்களின் தனிப்பட்ட தரவை திருடுகிறது. இது பயனர்களை ஏமாற்றி அவர்களது எஸ்எம்எஸ், புகைப்படம், தனிப்பட்ட தகவல்கள், Browsing History ஆகியவற்றையும் திருடுகிறது.

இந்தத் தரவைப் பயன்படுத்துவது அந்த பயனரை அச்சுறுத்துவதாகும். பிளாக்மெயில், அதீத வட்டி, கடனைத் திருப்பிச் செலுத்தத் துன்புறுத்தல், உயிரைப் பறிக்கும் வேலைகளை செய்கின்றன.

கிட்டத்தட்ட 12 மில்லியன் மக்கள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த ஆப் India, Thailand, Mexico, Indonesia, Egypt, Philipines உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்து வருகிறது.

புகாரைப் பெற்ற உடனேயே, கூகுள் இந்த விடயத்தை ஆராய்ந்து, 12 செயலிகளைத் தடை செய்தது. ஏற்கனவே கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 200க்கும் மேற்பட்ட லோன் ஆப்களை தடை செய்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்