Paristamil Navigation Paristamil advert login

2024 அவுஸ்ரேலிய ஓபன் தொடரில்  இருந்து விலகிய நிக் கிர்கியோஸ் 

2024 அவுஸ்ரேலிய ஓபன் தொடரில்  இருந்து விலகிய நிக் கிர்கியோஸ் 

9 மார்கழி 2023 சனி 07:01 | பார்வைகள் : 4990


அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஆடவருக்கான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நிக் கிர்கியோஸ் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற விம்பிள்டன் இறுதிப் போட்டியாளர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து ஓவுபெற்று வருகின்றார்.

28 வயதான அவர் முழங்கால் காயத்தால் கடந்த ஆண்டு கிராண்ட் ஸ்லாமைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஜனவரி முதல் வாரத்தில் பிரிஸ்பேனில் இடம்பெறும் அவுஸ்ரேலிய டென்னிஸ் தொடரில் பங்கேற்பதாக ரபேல் நடால் அறிவித்துள்ளார்.

22 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்ற ரபேல் நடால், 2023 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பின்னர் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்