Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : கத்திக்குத்து தாக்குதலில் சிறுவன் பலி!!

Val-de-Marne : கத்திக்குத்து தாக்குதலில் சிறுவன் பலி!!

9 மார்கழி 2023 சனி 09:51 | பார்வைகள் : 8853


Valenton (Val-de-Marne) நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான குறித்த சிறுவன் Vinted செயலி ஊடாக பொருள் ஒன்றை விற்பனை செய்வதற்காக ஐவர் கொண்ட குழு ஒன்றை சந்தித்துள்ளார். ஆனால் பொருட்களை வாங்க வந்த நபர்கள் குறித்த சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்