மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடம் திருட்டு! - ₤750,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் மாயம்!!

10 மார்கழி 2023 ஞாயிறு 06:20 | பார்வைகள் : 7270
மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து ₤750,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன. பரிசில் உள்ள ஆடம்பர விடுதியான Ritz இல் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
33 வயதுடைய தொழிலதிபர் ஒருவரும் அவரது மனைவியும் குறித்த Ritz விடுதியில் வெள்ளிக்கிழமை காலை 9.50 மணி அளவில் வெளியேறியிருந்தனர். பின்னர் அவர்கள் காலை 11.30 மணிக்கு தங்களது அறைக்கு திரும்பியபோது அங்கு அவர்களது உடமைகள் சிதறப்பட்டு, அங்கிருந்த நகைகளும் திருடப்பட்டுள்ளன.
₤750,000 யூரோக்கள் பெறுமதியுள்ள 6.51 கரட் டயமண்ட் மோதிரம், இரண்டு ப்ளாட்டினத்தினால் செய்யப்பட்ட கழுத்துமாலை ஆகிய நகைகள் காணாமல் போயுள்ளன.
பின்னர் அவர்கள் காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.