Paristamil Navigation Paristamil advert login

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் மைலேஜ்.. BMW எலக்ட்ரிக் கார்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் மைலேஜ்.. BMW எலக்ட்ரிக் கார்

10 மார்கழி 2023 ஞாயிறு 06:57 | பார்வைகள் : 1615


BMW என்பது உலகளவில் நன்கு அறியப்பட்ட சொகுசு கார் பிராண்ட் ஆகும். தற்போது இந்த நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே உலக சந்தையிலும், நமது உள்நாட்டு சந்தையிலும் ஏராளமான எலக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. BMW IX அதில் ஒன்று.

இந்தக் கார் இந்தியாவிலும் கிடைக்கிறது. தற்போது, ​​இந்த BMW IX காரில் உள்ள பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 372 கிலோமீட்டர் வரை செல்லும். இதை அதிகரிக்க நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

அந்த நோக்கத்திற்காக, மிச்சிகனை தளமாகக் கொண்ட ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்ப நிறுவனமான Out Next Energy (ONE) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தற்போது BMW நிறுவனம் ஒரு சுவாரசியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிதாக உருவாக்கப்பட்ட பேட்டரி மூலம், இதே கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 1000 கிலோமீட்டர் வரை செல்லும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது EV சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இப்போது பார்ப்போம்..

மூன்று மடங்கு அதிக Range
தற்போது BMW உருவாக்கிய Gemini dual chemistry battery மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தருவதாக அறிவித்துள்ளது. அதாவது இப்போது தரும் Range போல மும்மடங்கு Range கிடைக்கும்.

இது ஜெமினி பேட்டரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் rating 450WH/I volumetric energy density ஆகும். இது 185KW-க்கும் அதிகமான சக்தியை சேமிக்கிறது. இருப்பினும், பேட்டரியின் அளவில் எந்த மாற்றமும் இல்லை என்று ONE அறிவித்துள்ளது. தற்போதுள்ள பேட்டரியின் அதே அளவில் அதிக திறன் கொண்ட பேட்டரியை கொண்டு வரும் என்று கூறியுள்ளது.

இந்த வரிசையில், BMW தனது எலக்ட்ரிக் போர்ட்ஃபோலியோவை மேலும் அதிகரிக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, IM3 nomenclature வர்த்தக முத்திரைக்கு BMW விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் M division-ல் அதிக செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்