Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

10 மார்கழி 2023 ஞாயிறு 07:32 | பார்வைகள் : 5087


ரஷ்யாவின் அத்துமீறிய போர் தாக்குதலில் உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ராணுவ உதவிகளை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகளை விதித்து இருப்பதுடன், தங்கள் நட்பு நாடுகள் மூலமாகவும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது.

போரில் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட உதவியாக சமீபத்தில் அமெரிக்கா பல மில்லியன் டொலர் இராணுவ உதவி தொகுப்பை அறிவித்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 30 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் உக்ரைனுக்கான உதவியை குறைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் 29 சதவீத அமெரிக்கர்கள் தற்போது வழங்கப்படும் நிதியுதவி போதுமானது என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 18 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பியூ சோதனை மையத்தின் (Pew Research Center) கருத்துக்கணிப்பு தரவுகளின் மூலம் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

இவற்றில் பதிலளிக்க விரும்பாத நபர்களின் சதவீத விவரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்