புலம்பெயர் இலங்கை தொழிலாளர்கள் மூலம் ஏற்பட்டுள்ள நன்மை!
10 மார்கழி 2023 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 2703
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர்.
இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, தொழிலாளர்கள் கடந்த நவம்பரில் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட 384.4 மில்லியன் டொலர்கள் வருவாயைவிட 40 சதவீதம் அதிகமாகும்.
2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை அனுப்பியிருந்தனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் நிதியானது இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை 275,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.