தொப்பையை குறைக்க வேண்டுமா?
10 மார்கழி 2023 ஞாயிறு 14:37 | பார்வைகள் : 2153
உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடை ஆகியவை தான் இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் என்று பல காரணங்கள் இருந்தாலும், நாம் கொஞ்சம் முயன்றால் இதற்கு தீர்வு காண முடியும். சில நபர்களுக்கு கை, கால்கள் எல்லாம் மெலிதாகத் தான் இருக்கும். ஆனால், உடல் மட்டும் பெருத்து காணப்படும். அதிலும் தொப்பை விழுந்து நம் தோற்றத்தையே மாற்றிவிடும். வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதுதான் இதற்கு காரணம் ஆகும்.
வயிற்று பகுதி கொழுப்பை கரைத்து, தொப்பையை மறைக்க வேண்டும் என்று மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை சிலர் கடைப்பிடிக்கினனர். ஆனால், இதன் மூலம் பெரிய அளவுக்கான பலன் கிடைப்பதில்லை. நீங்களும் இத்தகைய பிரச்சினையை எதிர்கொண்டு வருபவர் என்றால் கீழ்காணும் ஆலோசனைகளைப் பின்பற்றி இதற்கு தீர்வு காண முடியும்.
தொப்பை அதிகரிப்பது ஏன் ? உடல் இயக்கமற்ற முடங்கிய வாழ்க்கை முறையை நாம் கடைப்பிடிக்கும் நிலையில், நாம் சாப்பிடுகின்ற உணவு பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பாக சேர தொடங்கும். சாப்பிட்ட உணவு செரிமானம் அளவு நாம் வேலை செய்யவில்லை என்றால், இந்த கொழுப்பு அதிகமாக நாளடைவில் தொப்பை தெரிய தொடங்கும்.
தொப்பையை குறைக்க முடியுமா ? நம் உடல் தோற்றத்தையே வித்தியாசமானதாக காட்டும் தொப்பையை குறைத்து, கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பமும். அதற்கு இந்த எளிமையான பயிற்சியை செய்யலாம். சைக்கிளை பின்பக்கமாக ஓட்டுவது இதற்கு பலன் தரும். அதெப்படி பின்பக்கமாக ஓட்டுவது என்ற கேள்வி எழுகிறதா? ஸ்டேண்ட் போட்டு அமர்ந்து கொண்டு ரிவர்ஸ் சைக்கிளிங் செய்யலாம்.
ரிவர்ஸ் சைக்கிளிங் செய்வதன் மூலமாக வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் இறுக்கம் அடையும். மேலும் வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். சைக்கிள் இல்லை அல்லது அந்த முறை சிரமமானதாக இருக்கிறது என்றால், சேரில் அமர்ந்தபடி அல்லது தரையில் படுத்தபடி ரிவர்ஸில் சைக்கிள் ஓட்டுவது போன்று உடலை இயக்கலாம். இந்த பயிற்சியை செய்வதன் மூலமாக தேவையற்ற கலோரிகள் கரையும் மற்றும் மெடபாலிச நடவடிக்கை மேம்படும்.
எப்படி பயிற்சி செய்யலாம்? கைப்பிடி இல்லாத சேரில் அமர்ந்து கொண்டு, பின்பக்கமாக கால்களை அசைத்து சைக்கிளிங் செய்யலாம். ஒரு சுழற்சிக்கு 15 முறை செய்வதன் மூலமாகவும், நாள் ஒன்றுக்கு இதுபோல 3 முறை பயிற்சி செய்வதன் மூலமாகவும் சிறப்பான பலன்களை நாம் அடைய முடியும்.