2023ல் அதிகம் தேடப்பட்ட தலைப்புக்கள் - விக்கிப்பீடியா இணையதளம் வெளியீடு!
11 மார்கழி 2023 திங்கள் 08:48 | பார்வைகள் : 1676
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நன்றாகப் புரிந்துகொள்ள விக்கிப்பீடியாவை நாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், இலவச ஆன்லைன் encyclopedia ஆண்டு முழுவதும் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளின் தரவை வெளியிடுகிறது.
விக்கிப்பீடியா இணையதளம் இந்த ஆண்டு 84 பில்லியன் ஹிட்களைப் பெற்றுள்ளது. அதில் 2023 இல் மிகவும் பார்க்கப்பட்டது ChatGPT. கிட்டத்தட்ட 50 மில்லியன் பக்கப்பார்வைகளைக் கொண்டுள்ளது.
மேலும் ஆங்கில விக்கிபீடியாவில் அதிகமாக தேடப்பட்ட கட்டுரைகளில் முதல் 25 கட்டுரைகளை பற்றி பார்க்கலாம்.
முதல் 25 கட்டுரைகள்
1. ChatGPT: 49,490,406 பக்கப்பார்வைகள்
2. 2023 இறப்புகள்: 42,666,860 பக்கப்பார்வைகள்
3. 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை: 38,171,653 பக்கப்பார்வைகள்
4. இந்தியன் பிரீமியர் லீக்: 32,012,810 பக்கப்பார்வைகள்
5.Oppenheimer(திரைப்படம்): 28,348,248 பக்கப்பார்வைகள்
6. கிரிக்கெட் உலகக் கோப்பை: 25,961,417 பக்கப்பார்வைகள்
7.J. Robert Oppenheimer: 25,672,469 பக்கப்பார்வைகள்
8. ஜவான் (திரைப்படம்): 21,791,126 பக்கப்பார்வைகள்
9. 2023 இந்தியன் பிரீமியர் லீக்: 20,694,974 பக்கப்பார்வைகள்
10. பதான் (திரைப்படம்): 19,932,509 பக்கப்பார்வைகள்
11.The Last of Us (டிவி தொடர்): 19,791,789 பக்கப்பார்வைகள்
12.Taylor Swift: 19,418,385: பக்கப்பார்வைகள்
13.Barbie(திரைப்படம்): 18,051,077 பக்கப்பார்வைகள்
14. கிறிஸ்டியானோ ரொனால்டோ: 17,492,537 பக்கப்பார்வைகள்
15. லியோனல் மெஸ்ஸி: 16,623,630 பக்கப்பார்வைகள்
16. பிரீமியர் லீக்: 16,604,669 பக்கப்பார்வைகள்
17.Matthew Perry: 16,454,666 பக்கப்பார்வைகள்
18. ஐக்கிய அமெரிக்கா : 16,240,461 பக்கப்பார்வைகள்
19. எலோன் மஸ்க்: 14,370,395 பக்கப்பார்வைகள்
20.Avatar: The Way of Water: 14,303,116 பக்கப்பார்வைகள்
21. இந்தியா: 13,850,178 பக்கப்பார்வைகள்
22.Lisa Marie Presley: 13,764,007 பக்கப்பார்வைகள்
23.Guardians of the Galaxy Vol. 3: 13,392,917 பக்கப்பார்வைகள்
24. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு: 12,798,866 பக்கப்பார்வைகள்
25.Andrew Tate: 12,728,616 பக்கப்பார்வைகள்
2023 இல் இன்றுவரை ஆங்கில விக்கிப்பீடியாவை அணுகிய முதல் நாடுகள் அமெரிக்கா (33.2 பில்லியன்) மற்றும் இங்கிலாந்து (9 பில்லியன்) - அடுத்து இந்தியா (8.48 பில்லியன்), கனடா (3.95 பில்லியன்) மற்றும் ஆஸ்திரேலியா (2.56 பில்லியன்).
மேலும் இந்த முதல் 25 பட்டியல் நவம்பர் 28 ஆம் திகதியின் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.