Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாரியோ மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

ஒன்றாரியோ மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்

14 ஆடி 2023 வெள்ளி 07:20 | பார்வைகள் : 8585


கனடாவின்  ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரில்  வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் காற்று கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த நகரின் வளியில் ரசாயன பதார்த்தங்கள் கூடிய அளவில் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் இந்த காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் நாளொன்றுக்க ஒரு சிகரட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

டொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மெத்தியூ அடம்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொருட்கள் முழுமையாக எரியாத போது வெளியாகும் ரசாயன பதார்த்தமான benzo (a)pyrene என்ற ரசாயன பதார்த்தம் ஹமில்டன் நகர வளியில் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் தரம் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வகையிலானது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்