Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும்போது அதிகளவு ஊதியம் கோரும் தொடருந்து ஊழியர்கள்!!

ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும்போது அதிகளவு ஊதியம் கோரும் தொடருந்து ஊழியர்கள்!!

8 தை 2024 திங்கள் 17:00 | பார்வைகள் : 10875


RATP மற்றும் SNCF ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ‘ஒலிம்பிக் போட்டிகள்’ இடம்பெறும் காலத்தில் அதிகளது ஊதியம் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 200 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், போக்குவரத்து சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்ட தொழிற்சங்கம் இந்த மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு மேலதிக கொடுப்பனவாக €50 யூரோக்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் இது தொடர்பாக இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்து நிறுவனம் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிகளின் போது பொது போக்குவரத்துக் கட்டணம் இரண்டு மடங்கு விலை அதிகரிப்புக்கு உள்ளாகும் என்பது அறிந்ததே.

வர்த்தக‌ விளம்பரங்கள்