கனேடிய பிரஜகள் துருக்கிக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும்....
9 தை 2024 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 2505
கனேடிய பிரஜகள் துருக்கிக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
90 நாட்களைக் கொண்ட சுற்றுலா வீசாவின் ஊடாக இவ்வாறு துருக்கி நாட்டுக்கு பயணம் செய்ய முடியும்.
இதுவரை காலமும் துருக்கிக்கு பயணம் செய்யும் கனேடியர்கள் வீசா பெற்றுக்கொண்டே பயணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா நோக்கில் பயணம் செய்யும் கனேடியர்கள் வீசா இன்றி துருக்கி செல்ல முடியும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் துருக்கிக்கு பயணங்களை மேற்கொள்வதற்கு, கனேடியர்கள் 60 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவிற்கான துருக்கி தூதரகம் இந்த வீசாவை வழங்கி வந்தது.
எனினும் மாணவர், மருத்துவ மற்றும் தொழில்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள விரும்பும் கனடியர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வீசா தொடர்பிலான விபரங்களை பெற்றுக்கொள்ளவும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் மூன்றாம் தரப்பு இணைய தளங்களை நம்ப வேண்டாம் என கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.