Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் கோர விபத்து - 25 பேர் பலி

பிரேசிலில் கோர விபத்து - 25 பேர் பலி

9 தை 2024 செவ்வாய் 09:22 | பார்வைகள் : 4505


பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  காயமடைந்த ஆறு பேர் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த விபத்து பாஹியாவில் உள்ள நோவா பாத்திமா மற்றும் காவியாவோ நகரங்களுக்கு இடையே உள்ள  வீதியில்  ஞாயிற்றுக்கிழமை 07.01.2024 இரவு இடம்பெற்றுள்ளது.

அதில் லொறியில் இருந்த 3 பேரும், பஸ்ஸில் இருந்த 22 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அவர்களில்  8 ஆண்களும் 17 பெண்களும்,  ஒருவர் கர்ப்பபிணித்தாயும் அடங்குவர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்