Paristamil Navigation Paristamil advert login

நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி Anne  

நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி Anne  

9 தை 2024 செவ்வாய் 11:08 | பார்வைகள் : 1487


ஐக்கிய இராஜ்ஜியத்துக்கும் (UK) இலங்கைக்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இளவரசி ஆனி (Anne) நாளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மூன்று நாள் விஜயமாக இந்த பயணம் அமையவுள்ளது.

இளவரசி ஆனியுடனான இந்த விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸும் பங்கெடுக்கின்றார்.

இந்தப் பயணம் 2024 ஆம் ஆண்டில் ஐக்கிய இராஜ்ஜிய அரச குடும்பத்தின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும்.

இந்த விஜயத்தின் போது அவர் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், அவர் இலங்கையில் இருக்கும் காலக்கட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இளவரசி அன்னே 1995 ஆம் ஆண்டு சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

2013 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியாக - அரசரும் ராணியும் இலங்கைக்கு பயணம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்