யாழில் ஆசிரியர் வீட்டில் கொள்ளை கும்பல் அட்டகாசம்

9 தை 2024 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 15051
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களின் வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள் தங்க சங்கிலி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
நீர்வேலி பகுதியில் உள்ள ஆசிரியர்களின் வீட்டினுள் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசிக்கும் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1