கனடாவில் வாகன விபத்துக்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
10 தை 2024 புதன் 07:46 | பார்வைகள் : 2706
கனடாவில் பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் அநேக பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் ஒன்றாரியோவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் மழைவீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதனால் குறித்த பகுதிகளில் வாகனப் போக்குவரத்தின் போது பல்வேறு விபத்துக்கள் பதிவாகியிருந்தன.
பல இடங்களில் வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஒன்றாரியோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அநேகமான வாகன விபத்துக்கள் வீதியில் வழுக்கி அல்லது பாதை சரியாக தெரியாத காரணத்தினால் தனி வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினால் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதைகள் வழுக்கும் தன்மையுடையவை என்பதனாலும், பனி மூட்டத்தினாலும் சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஒன்றாரியோவில் நிலவி வரும் பனிப்பொழிவு நிலைமைகளினால் அதிகவேக நெடுஞ்சாலைகளில் அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.