உலகின் முதல் Transparent OLED TV.., கண்ணாடி போன்று திரை
10 தை 2024 புதன் 07:50 | பார்வைகள் : 2241
LG நிறுவனம் உலகின் முதல் Wireless மற்றும் Transparent OLED TV-யை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை தான் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் Consumer Technology Assosiation நடத்தும் உலகின் பெரிய தொழில்நுட்ப நிகழ்வில் LG நிறுவனம் தனது புதிய டிவி பிராடக்டை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டில் உலகின் முதல் Wireless மற்றும் Transparent OLED TV-யை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இதற்கு LG நிறுவனம் OLED-TV என்று பெயரிட்டுள்ளது. இது தான் உலகின் முதல் Wireless மற்றும் Transparent OLED TV ஆகும். இந்த டிவியில் 4K தரம், Wireless audio மற்றும் Video டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தில் இயங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய OLED TV-ல் LG தனது புதிய Alpha 11 AI processor கொண்டு உருவாக்கியுள்ளது. இது முந்தைய சிப்செட்-ஐ காட்டிலும் 4 மடங்கு அதிக செயல்திறன், 70% Graphics Performance , 30% அதிவேக ப்ராசஸிங் திறன் போன்றவை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இது Zero Connect Box மூலம் இயங்குவதால் Wireless audio மற்றும் Video ட்ரான்ஸ்மிட் ஆக உதவுகிறது. இதன் மூலம், வீடியோ கேம் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் கன்சோல்களை டிவியில் இணைப்பதற்கு பதில் Zero Connect Box-ல் இணைத்தால் போதும்.
இந்த டிவியை சுவற்றில் மாட்டுவது போல அல்லது ஸ்டான்ட் ஆப்ஷனுடன் தனியாக வாங்கலாம். இந்த டிவியின் விலை குறித்த தகவலை எல்ஜி நிறுவனம் கூறவில்லை. இருப்பினும், இந்த ஆண்டே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.