கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு
10 தை 2024 புதன் 08:51 | பார்வைகள் : 2239
2000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறையில் செதுக்கப்பட்ட மனித முகங்கள் அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நதிக்கரையில் குறிப்பாக வடக்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டோ தாஸ் லேஜஸ்(Ponto Das Lajes) பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் கரும்பாறையில் செதுக்கப்பட்ட மனித முகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கரும்பாறையில் செதுக்கப்பட்ட இந்த மனித முகங்கள் 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த மனித முகங்கள் அகழ் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிதல்ல, இந்த முகங்களை அவர்கள் ஏற்கனவே நீருக்கு அடியில் இருக்கும் போது பார்வையிட்டுள்ளனர்.
ஆனால் இந்த முறையில் அந்தப் பகுதியில் வறட்சி மற்றும் தண்ணீரின் அளவு குறைந்து இருப்பதால் முதல் முறையாக இந்த மனித முகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த பெட்ரோகிளிஃப்ஸ் உருவங்கள் மனித அறிவின் தோற்றத்திற்கான புதிய கோணத்தை தருவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
படங்கள் அல்லது வடிவங்களை பாறைகள் மீது வரைவது அல்லது செதுக்குவதை பெட்ரோகிளிஃப்ஸ் என அழைக்கப்படுகிறது.
இந்த மனித முகங்கள் வரையப்பட்ட பெட்ரோகிளிஃப்ஸ் அப்பகுதியில் வாழ்ந்த பூர்வகுடி மக்களால் வரையப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.