இலங்கையில் நடுவீடுதியில் கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரி
10 தை 2024 புதன் 09:44 | பார்வைகள் : 2292
கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் ஊழியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரன் மற்றும் போதைப்பொருள் வியாபாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிலியந்தலை, மடபட ஜம்புரலிய பிரதேசத்தில் வசிக்கும், ஒரு பிள்ளையின் தாயான துலாஞ்சலி அனுருத்திகா, வைத்தியர் ஒருவரின் மனைவியாவார்.
கொலைக்கு பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக சந்தேகநபர் விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதயைடுத்து சந்தேகநபருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்ய பயன்படுத்திய கூரிய ஆயுதங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய கார் என்பன தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.