வெண்டைக்காய் மசாலா
10 தை 2024 புதன் 11:42 | பார்வைகள் : 1802
வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்…
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ,
நறுக்கிய வெங்காயம் – 1,
நறுக்கிய தக்காளி – 1,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
தயிர் - 2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி இலை,
கடுகு,
உழுந்து - 1 தேக்கரண்டி,
சீரகம்
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உழுந்து சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து இதில் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெண்டைக்காய் சற்றும் சுண்டு வந்ததும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
தொடர்ந்து கிளறி 5 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை தெளித்து நன்கு கலக்கவும். பின்னர் மற்றொரு 3 முதல் 4 நிமிடங்கள் சமைக்கவும்.
வெண்டைக்காய் பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் வெண்டைக்காய் மசாலா ரெடி.