Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 10,000 வீடுகளை 

இலங்கையில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 10,000 வீடுகளை 

10 தை 2024 புதன் 16:19 | பார்வைகள் : 2106


குறைந்த வருமானம் பெறும் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாளிகாவத்தை, சுகததாச உள்ளக விளையாட்டரங்கு அருகில் மாதம்பிட்டிய, கொலம்பகே மாவத்தை, நாவல ஆகிய பகுதிகளில் இந்தத் தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது வீடுகள் வழங்கப்பட்டுள்ள மக்களுக்கான வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான 14, 000 வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன் அவற்றில் 8,000 வீட்டுரிமைப் பத்திரங்கள் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படவுள்ளன. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்