Paristamil Navigation Paristamil advert login

மோடி இந்திய வரலாற்றில் மிக வெற்றிகரமான பிரதமர்: முகேஷ் அம்பானி பாராட்டு

மோடி இந்திய வரலாற்றில் மிக வெற்றிகரமான பிரதமர்: முகேஷ் அம்பானி பாராட்டு

10 தை 2024 புதன் 17:29 | பார்வைகள் : 5695


நரேந்திர மோடி தான் இந்திய வரலாற்றில் வெற்றிகரமான பிரதமர் என ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில், ‛ வைப்ரன்ட் குஜராத் 2024'ன் 10வது உலக உச்சி மாநாடு துவங்கியது. மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: சுற்றுச்சுழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் பசுமை ஆற்றலைத் தயாரிக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. 

எனவே, வரும் காலாண்டுக்குள் 'திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி கிகா காம்ப்ளக்ஸ்' ஜாம்நகரில் 5000 ஏக்கர் அளவில் அமைக்கப்பட்டு, அதில் பசுமை ஆற்றல் எரிபொருட்கள் தயாரிக்கப்படும். இதன் மூலம் பசுமை ஆற்றலை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவைச் சிறந்து விளங்கச் செய்யும்.


வெற்றிகரமான பிரதமர்

நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் வெற்றிகரமான பிரதமர். உலக அளவில் மிகச்சிறந்த தலைவராக மோடி பார்க்கப்படுவதால் குஜராத்தில் முதலீடு குவிகிறது. நமது பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர். ரிலையன்ஸ் நிறுவனம் என்றுமே குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாகவே இருக்கும். குஜராத் உருமாற்றம் பெற முக்கிய காரணமாக இருந்தது பிரதமர் மோடி. 

ரூ.12 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவில் முதல்முறையாக 'கார்பன் பைபர்' வாயிலாக 5ஜி சேவையை ஹசிராவில் நிறுவ ரிலையன்ஸ் திட்டமிட்டு உள்ளது. இதனால், 5ஜி மற்றும் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து பல வேலை வாய்ப்புகளின் மையமாக குஜராத் திகழும். 

கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.12 லட்சம் கோடி தொழில் முதலீடு செய்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு முதலீடு குஜராத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்திய 35 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்