Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ரொறன்ரோவில் சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

11 தை 2024 வியாழன் 06:55 | பார்வைகள் : 2362


ரொறன்ரோவில் எதிர்வரும் நாட்களில் கடும் பனிப் புயல் தாக்கம் ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் காற்றுத் தாக்கம் காரணமாக சுமார் 20 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து வடகிழக்கு பகுதியை நோக்கி இந்தப் புயல் நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பனிப்பொழிவின் அளவு அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவிற்கு மேலதிகமாக மழை வீழ்ச்சியும் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தல் காற்று வீசும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களுக்கு கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறல் வெளியிட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்