புதிய கொவிட் திரிபு - WHO விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
11 தை 2024 வியாழன் 08:12 | பார்வைகள் : 2304
சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் கிருமியால், கொவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
இலட்சக்கணக்கான உயிரிழப்பினாலும் பாரிய பொருளாதார வீழ்ச்சியினாலும் தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு கொரோனாத் தொற்று பரவுகை படிப்படியாக் குறைவடைந்தது.
இந்நிலையில் தற்போது ஜேஎன் 1 எனும் (JN 1) எனும் புதிய கொரோனா திரிபு பரவுகைத் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் விழிப்புடன் அனைவரும் செயற்பட வேண்டும்.
இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.
மக்கள் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாவிட்டால் விரைவாக செலுத்திக்கொள்ளவேண்டும்.
அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.