இஸ்ரேலிற்கு எதிரான இனப்படுகொலை வழக்கு ஆரம்பம்
11 தை 2024 வியாழன் 08:26 | பார்வைகள் : 1985
காசாவில் யுத்தம் தொடர்ந்தும் இடம்பெறும் வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள இனப்படுகொலை வழக்கினை இன்று சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
இஸ்ரேலிற்கு எதிரான ஹமாசின் தாக்குதல் 1948 சமவாயத்தினை மீறுகின்றது என தெரிவித்து தென்னாபிரிக்க தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு குறித்தே சர்வதேச நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது.
ஹமாஸ் கற்பழிப்பாளர் ஆட்சிக்கு தென்னாபிரிக்கா அரசாங்கம் சட்டபூர்வ அரசியல் பாதுகாப்பை வழங்குவதால் தென்னாபிரிக்காவின் அபத்தமான இரத்த அவதூறுகளை களைவதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாமீதான இராணுவநடவடிக்கையை இஸ்ரேல் இடைநிறுத்தவேண்டும் என்பதற்கான அவசரநடவடிக்கைகள் அவசியம் என தென்னாபிரிக்கா விடுத்துள்ள வேண்டுகோள் குறித்தே சர்வதே நீதிமன்றம் விசேடமாக ஆராயவுள்ளது.
தென்னாபிரிக்கா தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு கொலம்பியா பிரேசில் பாக்கிஸ்தான் உட்பட வேறு சில நாடுகள் ஆதரவளித்துள்ளன
ஹமாசின் ஒக்டோபர்ஏழாம் திகதி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகள் பேரழிவை ஏற்படுத்திய நிலையில் பலவாரங்களாக தொடர்கின்ற நிலையிலேயே தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் 23000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்துள்ளது என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவின் சனத்தொகையில் 85 வீதமானவர்கள் -1.9 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனியர்களிற்கான ஐநாவின் நிவாரண முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயிரகக்கணக்கான கட்டிடங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நீதிமன்றத்திற்கான 84 பக்க ஆவணத்தில் தென்னாபிரிக்காவினால் முறைப்பாடு செய்யப்பட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மையை கொண்டவை - இஸ்ரேலின் நடவடிக்கைகள் பாலஸ்தீன தேசிய இனமற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன என தென்னாபிரிக்க தெரிவித்துள்ளது.
இனப்படுகொலை வழக்குகள் நிரூப்பிப்பதற்கு கடினமானவை,
பல காலம் நீடிக்க கூடியவை எனினும் சர்வதேச நீதிமன்றம் தற்காலிக நடவடிக்கைகளை அறிவிக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேல் காசாவில் பொதுமக்களை கொல்வதையும் அவர்களிற்கு கடுமையான மன மற்றும் உடல் ரீதியாக தீங்கு விளைவிப்பதையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.