பிரபல கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்டது சிறை
11 தை 2024 வியாழன் 08:52 | பார்வைகள் : 1342
சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்ட நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சந்தீப் லமிச்சனேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
விசாரணைக்கு பின்னர் காத்மண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட சிறுமிக்கு நேபாள நாணயத்தில் சந்தீப் லாமிச்சானே இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் அவருக்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓகஸ்ட் 2022 இல் சம்பந்தப்பட்ட சிறுமியை வன்புணர்வு செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும் அவர் மேற்கில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டிக்காக வெளிநாட்டிலிருந்த நேபாளத்திற்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஜாமீனில் இருந்த அவர் மீண்டும் நாட்டின் தேசிய அணிக்காக விளையாடினார்.