Paristamil Navigation Paristamil advert login

’Élisabeth Borne பிரதமராக இருப்பதையே விரும்புகிறேன்!’ - எத்துவார் பிலிப்பின் கருத்தினால் சர்ச்சை!

’Élisabeth Borne பிரதமராக இருப்பதையே விரும்புகிறேன்!’ - எத்துவார் பிலிப்பின் கருத்தினால் சர்ச்சை!

11 தை 2024 வியாழன் 08:55 | பார்வைகள் : 3486


Élisabeth Borne கடந்த திங்கட்கிழமை தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அவருக்கு பதிலாக பிரான்சின் இளம் பிரதமராக கேப்ரியல் அத்தால் பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் எத்துவார் பிலிப் (Édouard Philippe) தெரிவித்த கருத்து ஒன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. “கேப்ரியல் அத்தால் பிரதமராக சிறந்த தேர்வு தான். ஆனால் இங்கு Élisabeth Borne இன் திறமையை பாராட்ட வேண்டும். குறைந்தது ஜூன் மாதம் (2024) இடம்பெற உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் வரையான காலப்பகுதி வரை அவர் பிரதமராக இருப்பதை நான் விரும்புகிறேன்.

அதேவேளை, கொள்கைகளையோ சித்தார்த்தங்களையோ மாற்றாமல் பிரதமரை மாற்றுவதால் என்ன ஆகிவிடப்போகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது இந்த கருத்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்