Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 2 நாட்களில் சிறுமி உட்பட 10 பேரை காணவில்லை!

இலங்கையில் 2 நாட்களில் சிறுமி உட்பட 10 பேரை காணவில்லை!

11 தை 2024 வியாழன் 09:19 | பார்வைகள் : 4875


இலங்கையில் இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட பத்து பேர்   நேற்று முன்தினம் மற்றும் நேற்று காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவராவார்.

குறித்த சிறுமியும் முப்பது வயதுடைய அவரது தாயாரும் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண், முல்லேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர், தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அம்பாறை கார்த்திவ் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர், மற்றும் வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மீனவர் ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும், மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்