Paristamil Navigation Paristamil advert login

◉ விற்பனைக்கு அனுப்பப்பட்ட கோழி இறைச்சிகள் - மீளப் பெறப்படுகிறது!!

◉ விற்பனைக்கு அனுப்பப்பட்ட கோழி இறைச்சிகள் - மீளப் பெறப்படுகிறது!!

11 தை 2024 வியாழன் 11:00 | பார்வைகள் : 5379


விற்பனைக்கு அனுப்பப்பட்ட பொதி செய்யப்பட்ட கோழி இறைச்சிகள், மீளப்பெறப்படுகிறது. குறித்த கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கான பக்டீரியா பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் மிகவும் பிரபலமான Loué நிறுவனத்தின் இறைச்சிகளில் ‘தொடை’ துண்டுகள் பொதிசெய்யப்பட்ட அனைத்து இறைச்சிகளும் நேற்று ஜனவரி 10 ஆம் திகதி முதல் மீளப்பெறப்படுகிறது.

அவற்றில் listeria monocytogenes எனும் ஆபத்தான பக்டீரியா இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அது விஷமுற்ற உணவாக கருதப்படுகிறது. அவற்றை உட்கொள்ளுவதால் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு உள்ளாக நேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்