Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 

உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் நகரம் 

11 தை 2024 வியாழன் 10:09 | பார்வைகள் : 2226


உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது.

லண்டனில் மணிக்கு 20 மைல் வேகத்திலேயே ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டுவதாக தொழில்நுட்ப நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக கூறப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள 55 நாடுகளில் 387 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, குறித்த ஆய்வின் படி, மிக மெதுவாக வாகனங்கள் இயக்கப்படும் முதல் நகரமாக லண்டன் பதிவாகியுள்ளது. 

லண்டனில் மையத்தில் மணிக்கு 50 மைல் தாண்டி வாகனங்களை இயக்க முடியாது எனவும், வாகனத்தை வேகமாக இயக்கக் கூடிய கட்டமைப்பு குறித்த பகுதியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

லண்டனுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து நாட்டின் டப்ளின், கனடாவின் டொரன்டோ, இத்தாலியின் மிலன், பெருவின் லிமா ஆகிய நகரங்கள் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இதையடுத்து, லிவர்பூல், ப்ரிஸ்டால், எடின்பர்க் ஆகிய நகரங்கள் மிக மெதுவாக வாகனங்களை இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், குறித்த தொழில்நுட்ப நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையை லண்டன் முதல்வர் சாதிக் கானின் செய்தித் தொடர்பாளர் நிராகரித்துள்ளார். 

லண்டன் நகரின் மையப் பகுதியை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டும் உலகில் வாகனங்கள் மிக மெதுவாக இயக்கும் முதல் நாடாக லண்டன் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்