Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

11 தை 2024 வியாழன் 11:04 | பார்வைகள் : 1959


நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 317.83 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.07 ரூபாவாக அதிகரித்துள்ளது.

விற்பனை பெறுமதியும் 327.54 ரூபாவிலிருந்து 327.64 ரூபாவாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறைந்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் உள்ள வர்த்தக வங்களில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கி; அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.77 ரூபாவிலிருந்து 317.01 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.81 ரூபாவிலிருந்து 328.06 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி; அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.41 ரூபாவிலிருந்து 315.54 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமின்றி 326.50 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கி; அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாவிலிருந்து 318.50 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 327 ரூபாவிலிருந்து 327.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்