பறக்கும் விமானத்தில் உயிரிழந்த யாழ் குடும்பஸ்தர்

12 தை 2024 வெள்ளி 05:06 | பார்வைகள் : 5817
சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது.
அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக குரோம்பேட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.