Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் கடும் பனிப்பொழிவு... பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

கனடாவின் கடும் பனிப்பொழிவு... பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

12 தை 2024 வெள்ளி 07:52 | பார்வைகள் : 7924


கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பனிப்புயல் தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரொறன்ரோ பெரும்பாபக பகுதியின் ஒரு சில இடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பனிப்புயல் நிலைமையை அவதானிக்க முடியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ரொறன்ரோ பெரும்பாகத்தின் சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பனிப்புயல் ரொறன்ரோ பெரும்பாகத்pதின் சில பகுதிகளை கடந்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் வீசும் சமயங்களில் பயணங்களை வரையறுத்துக் கொள்வது அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான குளிர் நிலவும் எனவும் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்