Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் திடீரென பலியாகிய  36 குழந்தைகள் 

பாகிஸ்தானில் திடீரென பலியாகிய  36 குழந்தைகள் 

12 தை 2024 வெள்ளி 08:37 | பார்வைகள் : 3113


பாகிஸ்தானின் காலநிலை மாற்றம் காரணமாக பல குழந்தைகள் கடும் குளிர் காலத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் பலியாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ஆம் திகதி வரை பள்ளிகளில் காலைக் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி குழந்தைகள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமல், காய்ச்சல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பக் கூடாது என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்பள்ளி மற்றும் ஆரம்பப்பிரிவு வகுப்புகளுக்கு ஜனவரி 19 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குழந்தைகளிடையே நிமோனியா வழக்குகள் அதிகரித்து வருவது தீவிர கவலையை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் பஞ்சாப்பில் 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்