ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்!
12 தை 2024 வெள்ளி 09:23 | பார்வைகள் : 3119
யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.
குறித்த தாக்குதல் இன்று12.01.2024 (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மைக்காலமாக செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வரும் பின்னனியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யேமனில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் தீர்மானத்தை கடும் ஆலோசனைகளிற்கு பின்னர் வேறுவழியின்றி எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4 ம் திகதிஅவுஸ்திரேலியா உட்பட 14 நாடுகள் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு அவர்கள் தொடர்ந்தும் செங்கடல் பகுதியில்கப்பல்களை தாக்கினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் என எச்சரித்திருந்தன என ரிச்சர்ட்மார்லஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்தும் கப்பல்களைதாக்கினார்கள் இதன் காரணமாகவே அவர்களிற்கு எதிராக இன்று தாக்குதல்நடத்தப்பட்டது என ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்
யேமன் மீதான தாக்குதலிற்கான தலைமையகத்தில் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் காணப்பட்டனர் எனவும் அவுஸ்திரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பிரிட்டனின்இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றநிலையை ஏற்படுத்துகின்றதா என்ற கேள்விக்கு கடல்பயணத்தை பாதுகாப்பதும் உலகவர்த்தக பாதைகளை பாதுகாப்பதும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன்களிற்கு மிகவும் அவசியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.