Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் -  உக்ரைன் அதிபர் நிராகரிப்பு

ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் -  உக்ரைன் அதிபர் நிராகரிப்பு

12 தை 2024 வெள்ளி 09:35 | பார்வைகள் : 7629


உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்து போர் தாக்குதலை மேற்கொண்டது.

இந்நிலையில் உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

இதேவேளையில்  ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாத நிலையில் பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது.

இதனால் ரஷ்யா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். 

உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. 

அது ரஷ்யா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். 

நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். 

அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்