Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க சரக்கு கப்பலை பறிமுதல் செய்த ஈரான்

அமெரிக்க சரக்கு கப்பலை பறிமுதல் செய்த ஈரான்

12 தை 2024 வெள்ளி 09:56 | பார்வைகள் : 2496


ஈரான்-அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு காணப்பட்டு இருந்தது. 

இந்த சூழலில் ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " 'சூயஸ் ராஜன்' என்ற பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ் ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.

ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் 'செயின்ட் நிக்கோலஸ்' கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்து.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்