Paristamil Navigation Paristamil advert login

பனீர் சீஸ் பால்ஸ்

பனீர் சீஸ் பால்ஸ்

12 தை 2024 வெள்ளி 15:42 | பார்வைகள் : 1637


பள்ளி விடுமுறை என்றாலே வீட்டிலிருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதிற்கு விதவிதமான ஸ்நாக்ஸ்கள் கேட்பார்கள். அதுவும்  தற்போதுள்ள குழந்தைகள் பீட்சா, பர்கர் என்று சாப்பிடுதற்குத்தான் விருப்பப்படுகிறார்கள்.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பனீர் சீஸ் பால்ஸ் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

பனீர் - 100 கிராம்

சீஸ் - 50 கிராம்

உருளைக்கிழங்கு - 2

பூண்டு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சோள மாவு - 50 கிராம்

மிளகு தூள் - 1 ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப


செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து நன்கு அலசி குக்கரில் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதன் தோலை சுத்தமாக நீக்கி அதை நன்கு மசித்துக்கொள்ளவும்.

தற்போது மசித்த உருளைக்கிழங்குடன் பதப்படுத்தப்பட்ட சீஸ், மொஸரெல்லா சீஸ், பன்னீர், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் சிறிது மிளகு தூள், ஆர்கனோ மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

அடுத்து தட்டு ஒன்றில் ப்ரெட் துண்டுகளை தூளாக மாற்றி தனியாக வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் சோள மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

இப்போது முதலில் தயாரிக்கப்பட்ட பன்னீர்-சீஸ் கலவையில் இருந்து தேவையான அளவு எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பிறகு அந்த உருண்டையை சோள மாவு கலவையில் தோய்த்து பின்னர் பிரட் துண்டுகளில் தோய்க்கவும்

வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ரெடி செய்துள்ள உருண்டையை போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும் .

அவ்வளவுதான் குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பன்னீர் சீஸ் பால்ஸ் தயார்.

இதை குழந்தைகளுக்கு சூடாக பரிமாறினால் விரும்பி சாப்பிடுவார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்