Paristamil Navigation Paristamil advert login

தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட திட்டம்!?

தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட திட்டம்!?

12 தை 2024 வெள்ளி 16:06 | பார்வைகள் : 7272


தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊதிய உயர்வைக் கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கத்துக்கும் SNCF நிறுவனத்துக்கும் இடையே இடம்பெற்ற பல கட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்பதை அடுத்து, இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களையும், வார இறுதி நாட்களையும் இலக்கு வைத்தும் அடுத்தடுத்த மாதங்களில் வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்