Clamart : கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!

12 தை 2024 வெள்ளி 18:06 | பார்வைகள் : 8027
கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்ட நிலையில், ஆண் ஒருவரது சடலத்தை Clamart (Hauts-de-Seine) நகர காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று ஜனவரி 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இச்சடலம் அங்குள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டது. நெஞ்சுப்பகுதியிலும், கழுத்தியும் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில், உறைந்த இரத்தத்துக்கு நடுவில் குறித்த நபர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதே கட்டிடத்தில் வசிக்கும் ஒருவரே காவல்துறையினரை அழைத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் நடத்திய நபரை சிலமணிநேரம் கழித்து கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.