உக்ரைன் நாட்டுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ரஷ்யா
13 தை 2024 சனி 05:32 | பார்வைகள் : 2404
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையிலான போர் பல மாதங்களை கடந்து தீவிரமடைந்து வருகின்றது.
போரில் உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ் இது தொடர்பாக கூறுகையில்,
" அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த நினைக்கிறது. இதை தற்காப்பாக கருத முடியாது.
இருப்பினும், போரில் அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்துவதற்கான அடிப்படை விடயமாக இது அமையும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.