Paristamil Navigation Paristamil advert login

வளிமாசடைவு : இல் து பிரான்சுக்குள் இன்று பல்வேறு கட்டுப்பாடு!

வளிமாசடைவு : இல் து பிரான்சுக்குள் இன்று பல்வேறு கட்டுப்பாடு!

13 தை 2024 சனி 06:48 | பார்வைகள் : 8548


இன்று ஜனவரி 13 ஆம் திகதி சனிக்கிழமை இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் அதிக வளி மாசடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, சில தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளியில் அதிக தூசி துகள்கள் மற்றும் அடர்த்தி கலந்திருக்கும் எனவும், எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



50 μg/m3 எனும் அளவில் இந்த வளி மாசடைவு பதிவாகிய நிலையிலேயே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் குளிர் காலத்தில் அதிகளவான வெப்பமூட்டி பயன்பாடு இருப்பதால் இந்த வளிமாசடைவு ஏற்பட்டுள்ளதாக அதனைக் கண்காணிக்கும் Airparif நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

நடைபயிற்சி, ஓட்டம், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இன்றைய நாளில் அதனை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்