Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் வின்னர் யார்?

பொங்கல் வின்னர் யார்?

13 தை 2024 சனி 06:57 | பார்வைகள் : 2078


பொங்கல் விருந்தாக ’அயலான்’ ’கேப்டன் மில்லர்’ ’மிஷின் சாப்டர் ஒன்’ மற்றும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய நான்கு தமிழ் நடிகர்களின் படங்களும், மகேஷ் பாபு நடித்த ’குண்டூர் காரம்’ மற்றும் தேஜா நடித்த ’ஹனுமான்’ ஆகிய தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்களின் முதல் நாள் வசூல் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

சிவகார்த்திகேயனின் ’அயலான்’ திரைப்படம் நேற்றைய முதல் நாளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷின் 'கேப்டன் மில்லர்’ முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ’ஹனுமான்’ திரைப்படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மகேஷ்பாபுவின் ’குண்டூர் காரம்’ என்ற திரைப்படம் வசூலில் சட்டை போடு போட்டுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் மட்டுமின்றி தமிழகம் கர்நாடகா என தென்னிந்திய மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படம் முதல் நாளில் 45 கோடி வசூல் செய்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த ஆண்டின் பொங்கல் வின்னர் மகேஷ் பாபுவின் ’குண்டூர் காரம்’ என தெரிகிறது. இதனை அடுத்து ’ஹனுமான்’ மற்றும் ’கேப்டன் மில்லர்’ ஆகிய படங்கள் அதிக வசூல் செய்துள்ளன. இந்த நிலையில் ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்