Paristamil Navigation Paristamil advert login

டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து வீரர்! 

டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நியூசிலாந்து வீரர்! 

13 தை 2024 சனி 08:28 | பார்வைகள் : 776


நியூசிலாந்தின் டிம் சௌதீ டி20யில் 150 விக்கெட்டுகளை முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஆக்லாந்தின் ஈடன் கார்டனில் நடந்த முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இப்போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் டிம் சௌதீ 150 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 117 போட்டிகளில் 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/18. 

100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டி20 அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
டிம் சௌதீ (நியூசிலாந்து) - 151 விக்கெட்டுகள்

ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 140 விக்கெட்டுகள்

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 130 விக்கெட்டுகள்

இஷ் சோதி (நியூசிலாந்து) - 127 விக்கெட்டுகள்

லசித் மலிங்கா (இலங்கை) - 107 விக்கெட்டுகள்

அடில் ரஷீத் (இங்கிலாந்து) - 107 விக்கெட்டுகள்

முஸ்தாபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்) - 105 விக்கெட்டுகள்

மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து) - 105 விக்கெட்டுகள்

ஷதாப் கான் (பாகிஸ்தான்) - 104 விக்கெட்டுகள்

மார்க் அடைர் (அயர்லாந்து) - 102 விக்கெட்டுகள்     

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்