Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அஸ்வின்...

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அஸ்வின்...

13 தை 2024 சனி 08:41 | பார்வைகள் : 3557


இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 25ஆம் திகதி தொடங்குகிறது.

மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

16 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

தமிழக வீரர் அஸ்வினுடன், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அதேபோல் கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்கள் இந்த அணியில் உள்ளனர்.

மேலும் கோலி, முகமது ஷமி போன்ற அனுபவ வீரர்களுடனும் இந்திய அணி களம் காண உள்ளது.    

வர்த்தக‌ விளம்பரங்கள்