பூமியின் முடிவு - வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்
13 தை 2024 சனி 09:20 | பார்வைகள் : 1979
உலகத்தின் முடிவு தொடர்பிலான புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பூமியின் வளிமண்டலத்தில் ஒரு வியக்க வைக்கும் மாற்றம் நடைபெறும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் பெரும் ஒட்சியேற்ற நிகழ்வுக்கு முன்பு பூமி எப்படி இருந்ததோ அதே நிலைக்கு நாம் திரும்பவேண்டிய நிலை ஏற்படும்.
சுமார் 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் ஒட்சியேற்ற நிகழ்வின் பின்னரே நமது பூமியில் உள்ள ஒட்சிசன் அளவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது.
இதுவே, பூமி மொத்தமாக மாறுவதற்கும் மனிதர்கள் உட்பட பல உயிரினங்கள் தோன்றவும் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஒட்சிசன் நிறைந்த காலம் பூமியில் எப்போதும் நிரந்தர அம்சமாக இருக்காது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு முன்பு அதிகரிக்கும் சூரியக் கதிர்வீச்சு பூமியின் கடல்களை சுமார் 2 பில்லியன் ஆண்டுகளில் ஆவியாகிவிடும் என்று கூறியது, ஆனால் இந்த புதிய ஆய்வில் ஒட்சிசன் குறைப்பு நிகழ்வு என்பது கடல் நீர் ஆவி ஆவதற்கு முன்பே நடக்கும் என்றும் அது பூமியில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.