யேமன் தலைநகரில் தொடர்ச்சியான தாக்குதல்!

13 தை 2024 சனி 09:34 | பார்வைகள் : 6467
யேமன் தலைநகர் சனாவில் இரண்டாவது நாளாகவும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ரைட்டர் தெரிவித்துள்ளது.
செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தைப் பாதிக்கும்வகையில் ஹெளதி அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன், யேமன் மீது தொடர் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பில் ஹெளதி செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
கடந்த 48 மணித்தியாலத்தில் 73 குண்டுவீச்சுகள் வீசப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயமுற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் என ஹெளதிகள் அறிவித்தனர்.
இதேவேளை 2014-ஆம் ஆண்டு அமைந்த, பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசை எதிர்த்து உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் அமைப்பான ஹெளதி அமைப்பு, காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தரை மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தக் கோரி கப்பல்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.