Paristamil Navigation Paristamil advert login

முதலாவது அரச பயணம்! - கீவ் நகரில் வெளியுறவுத்துறை அமைச்சர்!

முதலாவது அரச பயணம்! - கீவ் நகரில் வெளியுறவுத்துறை அமைச்சர்!

13 தை 2024 சனி 10:14 | பார்வைகள் : 2499


பிரான்சின் புதிய ஐரோப்பா மற்றும் பிரான்சுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள Stéphane Séjourné, தனது உத்தியோகபூர்வ முதலாவது அரச பயணமாக கீவ் நகருக்கு பயணித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை அவர் உக்ரேனின் தலைநகர் கீவுக்கு சென்றடைந்தார். அங்கு வைத்து அவர் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky இனைச் சந்திப்பார் என அறிய முடிகிறது.

இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தின் பிரான்ஸ் உக்ரேனின் சார்பாக செயற்பட்டு வருகிறமை அறிந்ததே. பல்வேறு தரப்பட்ட உதவிகளை தொடர்ச்சியாக உக்ரேனுக்கு வழங்கிவரும் பிரான்ஸ், எதிர்காலத்திலும் வழங்கும் என உறுதியளித்துள்ளது.

பிரான்ஸ் நேரம் மாலை 4 மணி அளவில் Volodymyr Zelensky இனை வெளியுறவுத்துறை அமைச்சர் Stéphane Séjourné சந்திப்பார் என அறிய முடிகிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்