ரஜினிகாந்துடன் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

13 தை 2024 சனி 13:01 | பார்வைகள் : 3511
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அயலான்’. இந்தப் படம் நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “அயலான்’ படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது. அதற்கான லீட் படத்தில் இருக்கிறது. இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதன் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இதுவரை எடுத்ததை வைத்து உருவான டீஸரை கண்டு கமல்ஹாசன் பாராட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் கமல்ஹாசனின் பங்களிப்பும் ஏதாவது ஒரு வகையில் இருக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளோம்.
‘ஜெயிலர்’ படத்தில் நானும் நடிப்பதாக முதலில் செய்தி வெளியானது. நானும் நெல்சனும் நண்பர்கள் என்பதால் அப்படி வெளியானது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் நான் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதிலும் உண்மை இல்லை” என்றார்.